குமரி கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் ஆட்சியர் தலைமையில் மீனவர்கள் குறைத்தீர் கூட்டம் நடைப்பெற்றது.

Update: 2024-06-29 07:52 GMT

மீனவர்கள் குறைத்தீர் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் மீனவர் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. மாவட்ட வருவாய் அதிகாரி பாலசுப்பிரமணியன், மீன் வளத்துறை அதிகாரி உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஏராளம் மீனவர்கள் கலந்து கொண்டனர். மீனவர்கள் தங்களது தரப்பில் கூறுகையில், மீனவர்கள் காணாமல் போனால் அரசு தினப்படி ரூபாய் 350 வழங்கி வருகிறது.ஆனால் மீன் பிடி தடை காலத்தில் ரூபாய் 8000 வழங்கி வருகிறார்கள்.

அதை ரூபாய் 21 ஆயிரமாக உயர்த்த நடவடிக்கை வேண்டும். இயந்திரம் பொருத்தப்பட்ட வள்ளங்களுக்கு 400 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என அரசு ஆணை வெளியிட்டு பல மாதங்கள் ஆகின்றன. அதை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுகம் தொடர்பாக நடக்கும் கூட்டங்களில் பதிவு செய்யப்படாத நபர்களுக்கும் அழைப்பு விடுக்கப்படுகிறது.

துறைமுகத்தில் பதிவு செய்தவர்களை மட்டுமே அழைத்து கூட்டங்களின் நடத்த வேண்டும். என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். கூட்டத்தில் மீனவர்களிடமிருந்து கோரிக்கைகளை கலெக்டர் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் மீது அடுத்த கூட்டத்தில் பதிலளிக்கப்படும் என்று கூறினார்.

Tags:    

Similar News