தற்காலிக காய்கறிச் சந்தைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் போராட்டம்
மார்த்தாண்டம் லாரி பேட்டையில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் மற்றும் மீன் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டம் காய்கறி சந்தை தமிழகததில் மிகவும் பிரபலமானதாகும். இதனால் எப்பொழுதும் அந்த காய்கறி சந்தை நெருக்கடியாக காணப்படும். இந்த சந்தையை விரிவுபடுத்தி நவீனப்படுத்த வேண்டும் என்ற பொது மக்களின் கோரிக்கையின் பேரில் ரூபாய் 14.60 கோடி மதிப்பில் நவீன மார்க்கெட் அமைக்க கடந்த 3-ம் தேதி அமைச்சர் மனோ தங்கராஜ் அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். இதை அடுத்து சந்தையின் அருகில் உள்ள லாரி பேட்டையில் தற்காலிக காய்கறிச் சந்தை அமைக்கப்பட்டது
. இதற்கு அங்குள்ள மீன் வியாபாரிகள் திரண்டு வந்து லாரி பேட்டை கேட்டுகளை இழுத்து மூடிய தோடு, தற்காலிக சந்தை அமைக்கவும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. அந்த இடத்தில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கப்பட்டால் தங்களுக்கு தொழில் பாதிக்கப்படும் என்று மீனவர்கள் தெரிவித்து, இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மீனவர்களுக்கும் வியாபாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது. இது குறித்த தகவல் அறிந்ததும் மார்த்தாண்டம் போலீசார் தலைமையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.