நடுக்கடலில் மீனவர்கள் மோதல் - ஒருவர் உயிரிழப்பு
நாகை அருகே நடுக்கடலில் திடீர்குப்பம்-கீச்சாங்குப்பம் மீனவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு மீனவர் மாயமான நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டு இறந்து இருக்கலாம் என போலீசார் தேடி வருகின்றனர்
நாகை மாவட்டம் திடீர்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ்க்கு சொந்தமான பைபர் படகில் சகோதரர்கள் ஆத்மநாபன், சிவனேசெல்வம், காலஸ்திநாதன் ஆகியோர் நாகை அருகே 2 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது கீச்சாங் குப்பத்தைச் சேர்ந்த கோகிலா செல்விக்கு சொந்தமான விசைப்படையில் 10 பேர் மீன்பிடிக்க சென்றபோது பைபர் படகின் மீன்பிடி வலை சேதமானதில் ஏற்பட்ட தகராறில் திடீர்குப்பத்தைச் சேர்ந்த சிவனே செல்வம் உயிரிழந்தார்,காலச்சி நாதன் கடலில் காணாமல் போன நிலையில் அவரும் கொலை செய்யப்பட்டு இறந்து இறக்கலாம் என தேடப்பட்டு வருகிறது.
மேலும் இடது கையில் முறிவு ஏற்பட்டு இறந்தது போல் மயங்கி கிடந்த ஆத்மநாபனை கொலையாளிகள் விட்டு சென்ற நிலையில் மயக்கம் தெளிந்து அருகில் மீன் பிடித்து கொண்டிருந்த மீனவர்கள் ஆத்மநாதன் நாகை மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சேதமான பைபர் படகை கடலில் இருந்து மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. இரு மீனவர் கிராமங்களில் பதட்டம் நிலவுவதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்து நாகை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் மீனவர் ஆத்மநாபனை நாகை மாவட்ட திமுக செயலாளரும் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத் தலைவர் என். கவுதமன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார். மேலும் இறந்த சிவனேசெல்வம் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.