ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள்
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்க்கு பிறகு நேற்று மீன் பிடிக்க சென்றனர்.
ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேல் காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்க்கு பிறகு நேற்று மீன் பிடிக்க சென்றனர். இலங்கை நீதிமன்றம் படகோட்டிகளுக்கு ஆறு மாத சிறையும், இரண்டாவது முறையாக எல்ல தாண்டி குற்றச்சாட்டில் கைது செய்யப்படும் மீனவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் இரண்டு ஆண்டு வரை சிறை தண்டனை விதித்து வருவதால் மீனவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
மத்திய அரசை கண்டித்தும் மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தி வந்தனர் உண்ணாவிரத போராட்டமானது இரண்டாவது நாளாக தொடர்ந்து நிலையில் நேற்று முன்தினம் இராமநாதபுரம் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் அவர் மீனவர்களிடம் மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும்,
முதலமைச்சரை நேரில் சந்திப்பதற்கு கூட்டிக்கொண்டு செல்வதாகவும் வைத்து வாக்குறுதியின் பெயரில் மீனவர்கள் அனைத்து போராட்டத்தையும் கைவிட்டு நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து அரசு அனுமதி சீட்டு பெற்றுக்கொண்டு 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர் இன்று காலை கரை திரும்பிய விசைப்படகுகள் போதுமான அளவு மீன் , இரால் நண்டு போன்றவை கிடைக்கவில்லை என்பதால் மீனவர்கள் நஷ்டத்துடன் கரை திரும்பினார்.
ஒரு சில மீனவர்கள் தனது படகில் மீன் பிடித்து சென்ற டீசலுக்கு உண்டான ரூபாய் கூட கிடைக்கவில்லை என மீனவர்கள் மத்தியில் பெரும் வேதனையை தெரிவித்தனர்