மீன்பிடித் திருவிழா!

பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஈரக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடந்தது.

Update: 2024-02-19 08:56 GMT
பொன்னமராவதி அருகே உள்ள வாழைக்குறிச்சி ஈரக் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. பொன்னமராவதி வட்டாரத்தில் கோடை காலத்தில் விவசாய கண்மாய்களில் நீர்மட்டம் குறையும் நிலையில் விவசாய செழிக்கவும் மழை பெய்யவும் வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறும். இதன்படி வாழைக்குறிச்சி ஈரக்கண்மாயில் நடைபெற்ற மீன் பிடித் திருவிழாவில் தொடக்கமாக மடை கருப்பர் கோயிலில் ஊர் பொதுமக்கள் வழிபட்டு வெள்ளை வீசப்பட்டது. இதில் ஜாதி மத பேதமின்றி சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பொதுமக்கள் கண்மாயில் இறங்கி கூடை, வலை, கச்சா துரி, உள்ளிட்ட மீன் பிடி உபகரனங்களை கொண்டு விரால், கெளுத்தி, கெண்டை, ஜிலேபி உள்ளிட்ட பல்வேறு மீன் வகைகளை பிடித்து மகிழ்ந்தனர். இதேபோல் க புதுப்பட்டி கண்மாயில் நடைபெற்ற மீன் பிடி திருவிழாவில் திரளான பொதுமக்கள் பங்கேற்று மீன் பிடித்து சென்றனர்.
Tags:    

Similar News