குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமல்

தேங்காய்பட்டணம்,கொல்லங்கோடு உட்பட குமரி மேற்கு கடற்கரை பகுதியில் இன்று நள்ளிரவு முதல் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளது.

Update: 2024-06-01 08:37 GMT
மீன்பிடிதடைக்காலம்

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல், முட்டம் ,தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்குதளமாக கொண்டு 1300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மேற்கு கடற்கரை அரபிக்கடல் பகுதிகளான கேரளா , குஜராத் கடல் பகுதியில் சுமார் 7-நாட்கள் முதல் 15-நாட்கள் வரை நடுக்கடல் பகுதியில் தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீன்களின் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டு மேற்கு கடற்கரை அரபிக்கடல் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை 60-நாட்கள் மீன்பிடி தடை விதிக்கப்படுகிறது.இந்த வருட 60-நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் நிலையில் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்த 1000-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் அவை தேங்காய் பட்டணம் முட்டம் உள்ளிட்ட துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது எஞ்சிய படகுகள் கரை திரும்பி வருகிறது.

Tags:    

Similar News