குமரி மேற்கு கடற்கரையில் ஜூன் 1 முதல் மீன்பிடி தடைக்காலம்

தேங்காய்பட்டணம்,நீரோடி,கொல்லங்கோடு உட்பட குமரி மேற்குக் கடற்ப்பகுதியில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்குகிறது.

Update: 2024-05-28 14:33 GMT

தேங்காய்பட்டணம்,நீரோடி,கொல்லங்கோடு உட்பட குமரி மேற்குக் கடற்ப்பகுதியில் 60 நாள் மீன்பிடி தடைக்காலம் ஜூன் 1 ம் தேதி முதல் துவங்குகிறது.


மீன்களின் இனப்பெ ருக்க பருவ காலத்தில் விசைப்படகுகள் மீன்பி டிப்பதற்கு மத்திய அரசு 60 நாட்கள் தடை விதித்துள்ளது. குமரி மாவட்டத் தில் இந்த தடைக் காலம் 2 பருவ காலமாக உள்ளது. கிழக்கு கடற்கரை பகுதி யாகிய கன்னியாகுமரி சின்னமுட்டம் பகுதியில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 ம் தேதி முதல் ஜூன் 15 ம் தேதிவரையும், மேற்கு கடற்கரை பகுதிகளாகிய மணக்குடி, ராஜாக்கமங்க லம், முட்டம்,குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி ஆகிய கடற்கரை கிரா மத்தில் ஜூன் 1ம் தேதி முதல் ஜூலை 31 ம் தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.இந்த வருடம் குமரி மேற்கு கடற்கரை கிரா மங்களில் தடைக்காலம் வரும் ஜூன் 1 ம் தேதி துவங்குகிறது.

இந்த மீன் பிடி தடைக்காலத்தில் விசைப்படகினர் தங்கள் படகுகளை பழுது பார்ப்பர். வலைகள், மீன்பிடி உபகரணங்களையும் பராமரிப்பு செய்வார்கள்இந்த மீன் பிடி தடைக் காலம் துவங்குவதையொட்டி ஆழ்கடல் பகுதிக்கு சென்ற விசைப்படகினர் இம்மாதம் 31 ம் தேதி நள்ளிரவு. கரை திரும்பி விடுவர். ஆனால் பைபர் வள்ளம், கட்டும ரங்கள் அருகில் மீன் பிடித்துவிட்டு உடனே கரை திரும்புவதால் வருடத்தின் அனைத்து நாட்களிலும் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுகிறது. விசைப்படகு தடை நாள்களில் கட்டுமரங்களில் பிடித்து வரப்படும் மீன்களுக்கு பெரும் மவுசு ஏற்படும் என்பது குறிப்பி டத்தக்கது.

Tags:    

Similar News