வாழைத்தார்களை திருடிய ஐந்து பேர் கைது
கைது;
Update: 2023-12-20 11:40 GMT
கைது
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே வாழைத்தார்களை திருடிய 5 பேரை காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன்கோட்டை சேர்ந்த முத்து காமாட்சி மகன் செல்லக்கண்ணு இவரது தோட்டத்தில் ஐந்து பேர் உள்ளே நுழைந்து வாழைத்தார்கள் வெட்டி திருடி சென்றனர். இது தொடர்பாக சின்னமனூர் காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் மார்க்கையன்கோட்டையைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் கார்த்திக், முத்துக்காளை, பிரதீப், சிவகுமார், சோமன் ஆகிய ஐந்து திருடியது தெரியவந்தது இதனை எடுத்து காவல்துறையினர் ஐந்து பேரையும் கைது செய்தனர் மேலும் அவர்களிடமிருந்து இரண்டு இரு சக்கர வாகனங்கள் 17 வாழைத்தார்கள் காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.