நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம்
தஞ்சாவூர் ஆட்சியர் தலைமையில் முத்தரப்பு கூட்டத்தில் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்யப்பட்டது.
தஞ்சாவூரில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ணயம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில், விவசாயிகள், நெல் அறுவடை இயந்திர உரிமையாளர்கள், அரசு அலுவலர்கள் பங்கேற்ற முத்தரப்பு கூட்டம் நடைபெற்றது. பின்னர் ஆட்சியர் கூறியதாவது, "இக்கூட்டத்தில், அனைத்து தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்ததன் அடிப்படையில், பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.2,500- எனவும், டயர் டைப் இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,750- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகையை மட்டும் பெற்றுக் கொள்ள வேண்டும்.
கூடுதலாக விவசாயிகளிடமிருந்து வாடகை வசூல் செய்தால், புகார் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள், வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண்மைத் துறை அலுவலர்களிடமும், மாவட்ட ஆட்சியரகத்தில் இயங்கி வரும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும் புகார் தெரிவிக்கலாம். மேலும், வேளாண் பொறியியல் துறை தஞ்சாவூர், செயற்பொறியாளர் எண். 90035 23343, தஞ்சாவூர், உதவி செயற்பொறியாளர் எண். 94431 17138, கும்பகோணம், உதவி செயற்பொறியாளர் எண். 94436 78621, பட்டுக்கோட்டை உதவி செயற்பொறியாளர் எண். 99761 93110 மற்றும் தஞ்சாவூர் வட்டார போக்குவரத்து அலுவலர் எண். 94420 93161, தஞ்சாவூர், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08537, கும்பகோணம், மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 99947 72510, பட்டுக்கோட்டை மோட்டார் வாகன ஆய்வாளர் எண். 93848 08366 என்ற எண்களில் விவசாயிகள் தங்கள் புகார்களை வாட்ஸ்ஆப் மூலமாக தெரிவித்திடலாம். புகார் மனுக்களை நேரடியாகவும் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் அளித்திடலாம்
. மேலும் வேளாண்மைப் பொறியியல் துறையின் பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,880- எனவும், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கு ரூ.1,160- என்ற வாடகையில் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, விவசாயிகள் தனியார் இயந்திரங்கள் மட்டுமின்றி, வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களையும் பயன்படுத்தி பயன்பெறலாம்" என்றார்.