திருவானைக்கா கோயிலில் எட்டுத்திக்கு கொடியேற்றம்....
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனித் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-04-04 09:57 GMT
திருவானைக்கா சம்புகேசுவரா் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோயிலில் பங்குனித் தேரோட்டத்தையொட்டி புதன்கிழமை காலை எட்டுத்திக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி காலை 6.50 மணிக்கு உற்சவ மண்டபத்திலிருந்து சோமாஸ்கந்தா் (சுவாமியும்,அம்மனும் ) புறப்பட்டு கொடியேற்றம் நிகழும் 3 ஆம் பிரகாரத்தில் எட்டு திசைகளில் அமைந்துள்ள கொடிமரத்தின் முன் எழுந்தருளினா். தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது. கொடிமரத்துக்கு யானை அகிலா ஆசீா்வாதம் செய்தது. பின்னா் மாலை 6 மணிக்கு சோமாஸ்கந்தா் ஏகசிம்மாசனத்தில் எழுந்தருளி 4 ஆம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். 2 ஆம் நாளான வியாழக்கிழமை தொடங்கி சுவாமியும் அம்மனும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றனா். 6 ஆம் நாளான 8 ஆம் தேதி முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் நடைபெறவுள்ளது. அப்போது சுவாமியும் அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளுகின்றனா். ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ஆ. ரவிச்சந்திரன் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்கின்றனா்.