புனித கித்தேரியம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

புனித கித்தேரியம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா நடந்தது.

Update: 2024-05-17 13:13 GMT

கொடியேற்ற விழா 

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கே.கே.பட்டி புனித கித்தேரியம்மாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு கொடியேற்று விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.இதில் விவசாயம் செழிக்கவும் நல்ல மழை பெய்ய வேண்டியும் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.

இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் பங்கேற்றனர். புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கே.கே.பட்டி கிராமத்தில் புனித கித்தேரியம்மாள் ஆலயம் உள்ளது.

இந்த ஆலய திருவிழா ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டிற்கான திருவிழா இன்று கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக தொடங்கியது. அதனை தொடர்ந்து தினமும் நவநாள் திருப்பலி நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. கே.கே.பட்டி பங்குத்தந்தை ஆரோ சேசுராஜ் தலைமையில் நல்ல மழை பெய்ய வேண்டியும் விவசாயம் செழிக்கவும் உலக ஒற்றுமை வேண்டியும் சிறப்பு ஜெப வழிபாடு மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்றது.

மேலும் ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலித்து காண்போரை கண்கவரச்செய்தது. இதில் ஏராளமான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மற்றும் ஜாதி மத இன பாகுபாடின்றி ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News