நத்ததில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கங்கள் சார்பில் கொடியேற்று விழா

நத்தத்தில் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கங்கள் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.

Update: 2024-05-02 09:57 GMT

கொடியேற்று விழாவில் கலந்து கொண்டவர்கள்

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் இருசக்கர வாகனம் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெற்றது.இதற்கு சங்கத் தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். செயலர் வீரையா முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து தொழிற்சங்கத்தின் கொடி ஏற்றப்பட்டு, பொருளாளர் சரவணன் நன்றி கூறினார். மேலும் நத்தம் தமிழ்நாடு மின் அமைப்பாளர்கள் சங்கம் சார்பாக மே தின கொடியேற்று விழா நடைபெற்றது சங்கம் துணை தலைவர் துபாய் ரஹிம் கொடியை ஏற்றினார்.

இதில் செயலாளர் விஜய சங்கர் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் தொடர்ந்து இனிப்புகள் வழங்கப்பட்டது.இதறற்கு முன்னதாக கோவில்பட்டி கைலாசநாதர் கோயில் உலக நன்மை வேண்டி சங்கத்தின் சார்பில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

Tags:    

Similar News