துணை ராணுவப்படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது இதை ஒட்டி பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் கொடி அணிவகுப்பு நடைபெற்றது..
Update: 2024-04-02 06:43 GMT
வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் பொள்ளாச்சியில் காவல்துறை, மத்திய துணை ராணுவப்படை வீரர்கள் சார்பில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது பொள்ளாச்சி.. ஏப்ரல்..02 தமிழகத்தில் மக்களவை தேர்தல் வரும் 19.ஆம் தேதி ஒரே கட்டமாக நடைப்பெறவுள்ள நிலையில் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.. அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பொள்ளாச்சி நகர் பகுதியில் தேர்தல் பணி பாதுகாப்பிற்றாக 100 க்கு மேற்பட்ட மத்திய துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணிகளுக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர் மேலும் வரும் ஏப்ரல் 19.ம் தேதி நடைபெற உள்ள மக்களவை தேர்தலில் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தலைமையில் மத்திய துணை ராணுவ படையினர் மற்றும் காவல்துறையினர் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.. இந்த பேரணி கோவை சாலையில் உள்ள மகாலிங்கபுரம் பகுதியில் தொடங்கி காந்தி சிலை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வெங்கட்ராமன் பள்ளி வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக இந்த அணிவகுப்பு நடைபெற்றது.. இதில் மத்திய துணை ராணுவ படை மற்றும் காவல் துறையினர் என 485 பேர் கலந்துகொண்டு பாலக்காடு சாலையில் உள்ள காவலர் திருமண மண்டபத்தில் அணிவகுப்பு பேரணி நிறைவடைந்தது பின்னர்கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது வரும் பாராளுமன்ற தேர்தலில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் அச்சமின்றி வாக்களிக்க வேண்டும் எனவும் 100 சதவீதம் வாக்குபதிவை உறுதி செய்து பொதுமக்கள் அச்சமின்றி தங்களது ஜனநாயக கடமை மேலும் கோவை மாவட்டத்தில் பதட்டமாக உள்ள வாக்குச்சாவடிகளில் காவல்துறையினர் மற்றும் மத்திய துணை ராணுவப் படையினர் கூடுதலாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்தார்.. பேட்டி.. பத்ரி நாராயணன்.. கோவை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்..