ஜெயங்கொண்டத்தில் கொடி அணிவகுப்பு ஒத்திகை

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசார் ஜெயங்கொண்டத்தில் கொடி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-04-07 04:25 GMT

கொடி அணிவகுப்பு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக போலீசார் ஜெயங்கொண்டத்தில் கொடி அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி  நடத்தினர்.

பாராளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த நிலையில்,  ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும், இதுகுறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருப்பதை உணர்த்துவதற்காகவும், போலீசார் மற்றும் சிஐஎஸ்எப் எனப்படும் மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு அலுவலகத்திற்கு எதிரே தனியார் பள்ளி முன்பு தொடங்கியது.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமையில் தொடங்கிய இந்த ஊர்வலமானது தா.பழூர் ரோடு, பஸ் ஸ்டாண்ட் ரோடு, பஸ் நிலையம், அண்ணா சிலை, கடைவீதி, நான்கு ரோடு, விருத்தாச்சலம் ரோடு, தேவாங்க முதலியார் தெரு சிதம்பரம் சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலம் வந்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.ஊர்வலமானது சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் திரையரங்கத்திற்கு முன்பு வந்து முடிவடைந்தது.

இதில் நோடல் ஆபீசர் முத்துக்குமார், அசிஸ்டன்ட் கமாண்டர் பிரத்தீக் போலீஸ் இன்ஸ்பெக்டர் அரவிந்த், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அந்தோணி,ஆரி, ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன்,மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு தமிழ்மாறன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிவாணன், ஜெயங்கொண்டம் ராமராஜன். ஆண்டிமடம் நடராஜன், மீன்சுருட்டி பிரேம்குமார், தா பழூர் ராஜேந்திரன், உடையார்பாளையம் தனபால், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், திருவேங்கடம், லட்சுமிபிரியா, நடேசன் மற்றும் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பொதுமக்கள் பயமின்றி ஜனநாயக கடமையை ஆற்ற விழிப்புணர்வு ஏற்படுத்தினர். போலீசாரின்  அணிவகுப்பை கடைவீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குழுமியிருந்து பொதுமக்கள் வேடிக்கை பார்த்து ரசித்தனர்.

Tags:    

Similar News