நான்கு வழிச்சாலையில் ஒளிரும் ஸ்டிக்கர் அமைக்கணும்!

நாகர்கோவில் - காவல்கிணறு புதிய நான்குவழி சாலையில் வாகன நடமாட்டம் அதிகரித்துள்ள நிலையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-04 06:40 GMT

பைல் படம் 

குமரி மாவட்டம் நாகர்கோவில் – காவல்கிணறு புதிய நான்குவழி சாலையில் தற்போது அரசு பஸ்கள் உட்பட பெரும்பாலான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில் நான்குவழி சாலையில் இணைப்பு சாலைகள் செல்லும் சில பகுதிகளில் பேரிகார்டுகள் வைக்கப்பட்டு, இரவு நேரங்களில் வாகன ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. ஆனால் தோவாளை அருகே இந்த நான்குவழி சாலையில் எந்தவித அறிவிப்பு பலகையும் வைக்காமல், ரோட்டின் பாதி பகுதியை அடைத்தவாறு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளது.

இது இரவு நேரங்களில் ஓட்டுநர்களுக்கு சரியாக தெரியாததால், வேகமாக வரும் வாகனங்கள் தடுப்புகளில் மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. அதேபோல தெற்கு பகுதியில் இருந்து டாரஸ் லாரிகளில் மண் ஏற்றிக்கொண்டு நான்குவழி சாலையில் ஏறுகின்றன. அப்போது காவல்கிணறு பகுதியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வரும் வாகனங்கள் இந்த டாரஸ் லாரியில் மோதி விபத்துக்கு உள்ளாகும் சூழ்நிலை ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு வேலியில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி வைக்க வேண்டும். மேலும் வானக ஓட்டுநர்களை எச்சரிக்கும் வகையில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

Similar News