பிற்படுத்தப்பட்ட நல துறையின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள்

பிற்படுத்தப்பட்ட நல துறையின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

Update: 2023-12-12 06:32 GMT

பிற்படுத்தப்பட்ட நல துறையின் சார்பில் வெள்ள நிவாரணப் பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினா்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கிய பின்னர், கடந்த நான்கு நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில், வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள ‘மிக்ஜாம்’புயல் காரணமாக, தொடர்ந்து பெய்து வந்த வரலாறு காணாத மழையால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்னலில் இருக்கும் மக்களுக்கு அரசோடு கரம் கோத்து சகமனிதரின் துயர் துடைத்திட தொண்டுள்ளம் படைத்த எல்லோரும் ஓரணியாய் திரள வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல துறையின் சார்பில் வெள்ள நிவாரண பொருட்களை பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் பாலகிருஷ்ணன் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமாவிடம் வழங்கினார்.

Tags:    

Similar News