சென்னைக்கு அனுப்பப்பட்ட வெள்ள நிவாரணப் பொருட்கள்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தர்மபுரியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன; கலெக்டர் சாந்தி, கொடியசைத்து லாரியை அனுப்பி வைத்தார்.

Update: 2023-12-08 10:04 GMT

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தர்மபுரியில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டன; கலெக்டர் சாந்தி, கொடியசைத்து லாரியை அனுப்பி வைத்தார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தர்மபுரி மாவட்டம், 08/12/2023. தர்மபுரி மாவட்ட நிர்வாகமும்-பச்சமுத்து கல்வி குழுமமும் இணைந்து "மிக் ஜாம் புயல்" மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தலைமையில் கொடியசைத்து சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

தர்மபுரி மாவட்ட நிர்வாகமும்-பச்சமுத்து கல்வி குழுமமும் இணைந்து சென்னையில் ஏற்பட்ட "மிக் ஜாம் புயல்" மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி, தலைமையில் கொடியசைத்து இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னையில் மிக்ஜாம் புயல் கனமழையினால் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு பகுதிகளில் சீரமைப்புப் பணிகளை தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டுள்ளது.

இதன் விளைவாக பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். இந்நிலையில் சென்னைக்கு புயல் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கும் பணி தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்ட நிர்வாகமும் பச்சமுத்து கல்லூரி கல்வி குழுமமும் இணைந்து 5 கிலோ பாக்கெட் அரிசி 1000 எண்ணிக்கைகளும், 500 கிராம் மைதா பாக்கெட் 250 எண்ணிக்கைகளும், 1 கி.கிராம் பாக்கெட் ரவை 500 எண்ணிக்கைகளும், 250 கிராம் பாக்கெட் சர்க்கரை 1000 எண்ணிக்கைகளும், பிஸ்கட் பாக்கெட் 1000 எண்ணிக்கைகளும், பிரட் பாக்கெட் 1000 எண்ணிக்கைகளும், சேமியா பாக்கெட் 1000 எண்ணிக்கைகளும், வாட்டர் கேன் 13,600 எண்ணிக்கைகள் என 8 வகையான நிவாரண பொருட்கள் அடங்கிய லாரி மூலம் சென்னையில் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு தேவையான வெள்ள நிவாரண பொருட்களை தர்மபுரி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் சென்னை அனுப்பி வைக்கும் பணியானது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிகழ்ச்சியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன், மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், தர்மபுரி வருவாய் கோட்டாட்சியர் டி.ஆர்.கீதாராணி, தர்மபுரி பச்சமுத்து கல்லூரி கல்வி குழும தலைவர் பாஸ்கர் மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News