சிட்லிங் கல்லாறு தடுப்பனையில் வெள்ளப்பெருக்கு
தர்மபுரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பொழிந்த கனமழையால் சிட்லிங் கல்லாறு தடுப்பனையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
Update: 2024-05-30 11:27 GMT
தர்மபுரி மாவட்டம் , அரூர் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால், பொது மக்கள் அவதியடைந்து வீட்டுக்குள் தஞ்சமடைந்தனர். அக்னி நட்சத்திரம் துவங்கி வெயில் கடும் சுட்டெரித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஒரு சில இடங்களில் லேசான மலையும் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது.
மலை பகுதிகளான ஏகே. தண்டா, வேலனூர், சிட்லிங் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் கனமழை கொட் டியது. மழையின் காரணமாக சிட்லிங் கல்லாறு தடுப்பணையில் வெள் ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் கல்லாறு தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கிணறு, போர் வெல்களில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது