ஆழியாறு கவியருவியில் வெள்ளப்பெருக்கு
வால்பாறையில் கனமழை பெய்வதால் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆழியாறு கவியருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கபப்ட்டுள்ளது.
பொள்ளாச்சி..ஜூன்..26 கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள வால்பாறை மற்றும் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் தென்மேற்கு பருவ மழையானது தொடங்க உள்ள நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆன வால்பாறை தலைநகர் எஸ்டேட், சத்தி எஸ்டேட், மற்றும் கவர்கள் பகுதிகளில் நேற்று இரவு முதலே தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார வால்பாறை சாலையில் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவி எனப்படும் கவியருவியில் திடீர் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது..
இதனால் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அருவிக்கு செல்ல தற்போது ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்து வரும் மழையானது குறைய தொடங்கியவுடன் அருவியில் வெள்ளத்தால் அடுத்து செல்லப்பட்ட தடுப்பு சுவர் கம்பிகளை சீரமைக்கப்பட்டவுடன் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.