சாத்தூர் பகுதியில் வெள்ளபெருக்கு

சாத்தூர் பகுதிகளில் 203மி.மீ மழை பதிவாகியுள்ளது,மூன்று அணைகள் திறக்கப்பட்டுவைப்பாற்று பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது

Update: 2023-12-18 08:06 GMT
சாத்தூர் பகுதிகளில் 203மி.மீ மழை பதிவாகியுள்ளது,மூன்று அணைகள் திறக்கப்பட்டுவைப்பாற்று பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
விருதுநகர் மாவட்டம் சாத்தூர்,வெம்பக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 18 மணி நேரத்திற்கும் மேலாக தொடர் மழை பெய்து வருகிறது.இதுவரை விருதுநகர் சாத்தூரில் 203 மி.மீ மற்றும் வெம்பகோட்டையில் 180மிமீ மழை பதிவாகியுள்ளது. பல்வேறு பகுதிகளில் உள்ள ஏராளமான கண்மாய், குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பிய நிலையில் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை,கோல்வார்பட்டி, இருக்கன்குடி ஆகிய அணைகளுக்கு அதிக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் பாதுகாப்புக்காக மூன்று அணைகளும் இன்று காலை முதல் திறந்து விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் நீர்நிலைகளுக்கு செல்லாமல் பாதுகாப்புடன் இருக்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும் வெம்பகோட்டை அணை திறக்கபட்டதை தொடர்ந்து வைப்பாற்று பகுதியில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் வெம்பக்கோட்டையிலிருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் குறுக்கே உள்ள பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  இதனிடையே வெம்பக்கோட்டை வைப்பாற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

Similar News