சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி பூச்சொரிதல் விழா துவங்குகிறது.

Update: 2024-03-02 03:34 GMT

 சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சித்திரை மாத தேரோட்டத்தை முன்னிட்டு வரும் 10ம் தேதி பூச்சொரிதல் விழா துவங்குகிறது. 

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயில் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இக்கோவிலுக்கு திருச்சி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் மற்றும் பிறமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனை தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர்.சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பூச்சொரிதல் விழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டுதோறும் மாசி மாத கடைசி ஞாயிறு முதல், பங்குனி மாதகடைசி ஞாயிறு வரை பக்தர்களுக்காக அம்மனே 28 நாட்கள் பச்சை பட்டினி விரதம் இருப்பது இந்த கோவிலின் தனிச் சிறப்புஆகும்.

இந்த 28 நாட்களும் இக்கோவிலின் அம்மனுக்கு தளிகை, நைவேத்தியம் கிடையாது. துள்ளுமாவும், நீர்மோர், கரும்பு, பானகம் மற்றும் இளநீர் மட்டுமே நைவேத்தியமாக வழங்கப் படும். இப்படி சிறப்புமிக்க இக்கோவிலின் பூச்சொரிதல் விழா வருகிற மார்ச் 10 ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) அன்று தொடங் குகிறது. அன்று, அதிகாலை விக்னேஷ்வர பூஜைகளுடன் காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பூச்சொரிதல் விழா தொடங்குகிறது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி தலைமையில் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News