சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா

சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு பெரம்பலூரில் இருந்து அம்மன் அலங்காரத்துடன் பூ எடுத்து செல்லும் நிகழ்வு நடைபெற்றது.

Update: 2024-03-11 10:15 GMT

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஆண்டுதோறும் நடைபெறும் மாசி மாதம் திருவிழாவை முன்னிட்டு பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம் அதற்கான பூச்சொரிதல் விழா மார்ச் 11ஆம் தேதி நடைபெற உள்ளது அதற்காக பெரம்பலூர் நகர் சுற்றுப்பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர்கள் சங்கம், உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் சங்கங்கள், இயக்கங்களின், சார்பில் மாரியம்மன் சுவாமி அலங்காரம் செய்து பொது மக்கள் சார்பாகவும் இயக்கங்கள் சார்பாகவும் பூக்கள் எடுத்துச் செல்லும் நிகழ்வு மார்ச் - 10ம் தேதி இரவு 10 மலை அளவில் நடைபெற்றது,

இதில் மாரியம்மனுக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மேலும் வண்ண விளக்குகள் அலங்காரத்துடன் டிராக்டர் மூலம் கொண்டு செல்லப்பட்டது, செல்லும் வழியில் வானவேடிக்கைகள் மற்றும் தப்பாட்ட கலைநிகழ்ச்சிகளுடன் சமயபுரம் கோவிலுக்கு பூ கூடைகள் எடுத்துச் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது, கொண்டு செல்லப்படும் பூக்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு சாத்தப்படும். அப்போது பக்தர்கள் பூக்கள் மற்றும் பிரசாதங்கள் கொடுத்து பூஜை செய்து வழிபட்டுச் சென்றனர்.

Tags:    

Similar News