பறக்கும் படை அதிகாரிகள் தங்க ஆபரணங்கள் பறிமுதல் !

தங்கம் மற்றும் வைர நகைகளை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-04-06 09:56 GMT

பறக்கும் படை

கோவையில் இருந்து வெளிமாநிலங்களுக்கு அனுப்பட இருந்த தங்கம் மற்றும் வைர நகைகள்,ஆபரணங்களை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.கோவையில் செயல்படும் AMBE express நிறுவனம் கோவையில் தயாராகும் தங்க நகைகளை விமானம் மூலம் வெளிமாநிலங்களுக்கு அனுப்பும் பணியினை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் இன்று சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி பறக்கும் படை அதிகாரிகள் பெர்க்ஸ் மேல்நிலை பள்ளி அருகே சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது அந்த வழியாகAMBE express நிறுவனத்தின் வாகனத்தினை நிறுத்தி அதிகாரிகள் சோதனையிட்டபோது அதில் தங்கம் மற்றும் வைர நகைகள் இருப்பது தெரிய வந்தது.

இதனையடுத்து ஆபரணங்கள் மற்றும் வைர நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.இதனை பறக்கும் படை அதிகாரிகள் தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்து அவற்றை அளவிடும் பணியில் ஈடுபட்டனர்.இது குறித்து சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் மணிமேகலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது பறக்கும் படை அதிகாரிகள் பெர்க்ஸ் ஸ்கூல் ஜங்ஷன் பகுதியில் சோதனை நடத்தியபோது தங்கம் மற்றும் வைர நகைகளுடன் வந்த வாகனத்தில் சுமார் மதிப்பு 3 கோடி 54 லட்ச ரூபாய் மதிப்பிலான ஆபரணங்கள் பறிமுதல் செய்யபட்டதாக தெரிவித்தார்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்க மற்றும் வைர நகைகள் கருவூலத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் தங்கம் மற்றும் வைர நகைகளின் சுமார் மதிப்பு மூன்றரை கோடி எனவும் நகைகளை மதிப்பிடும் பணியானது நடத்தப்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்தார்.தனியார் நிறுவனத்தினர் உரிய ஆவணங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கபடும் போது பறிமுதல் செய்யபட்ட நகைகள் திருப்பி அளிக்கபடும் என தெரிவித்தனர்.

Tags:    

Similar News