பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி
கெங்கவல்லி செல்லும் சாலையில் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி வாகன தணிக்கை மேற்கொண்டனர்.;
Update: 2024-04-05 06:33 GMT
பணம் ஒப்படைப்பு
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் தம்மம்பட்டி கெங்கவல்லி செல்லும் சாலையில் மூலபுதூர் என்ற இடத்தில் இன்று இளநிலை பொறியாளர் அதிகாரி தெய்வராணி தலைமையில் வாகன தணிக்கை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக வந்த பைக்கை நிறுத்தி சோதனை செய்த போது கணக்கில் வராத 92,490 ரூபாய் கைப்பற்றப்பட்டது. மேலும் விசாரணையில் பெத்தநாயக்கன்பாளையம் 11வது வார்டு பகுதியை சேர்ந்த ராம்குமார் என்பவர் தெரியவந்தது.