சாலையில் பறக்கும் துாசி: வாகன ஓட்டிகள் அவதி
சாலையில் பறக்கும் துாசியாழ் வாகன ஓட்டிகள் அவதி அடைந்துள்ளனர்.
By : King 24X7 News (B)
Update: 2023-11-26 13:22 GMT
காஞ்சிபுரத்தில் இருந்து, 2.5 கி.மீ., துாரமுள்ள பொன்னேரிக்கரை சாலை உள்ளது. இச்சாலை 1.30 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. புதிய சாலை அமைக்கும் பணிக்காக, சிமென்ட் ஜல்லி கொட்டி உள்ளனர். ஆனால், தார்ச்சாலை பணி துவக்கவில்லை.
ஒரே தார்ச்சாலை வழியாக பொன்னேரிக்கரையில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வாகனங்கள் மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பொன்னேரிக்கரை வரும் வாகனங்கள் செல்வதால், அளவுக்கு அதிகமாக துாசி பறக்கிறது. இதனால், சாலையில்வாகனங்கள் செல்லும் போது, சிமென்ட் துாசியினால் மூச்சுத்திணறல் ஏற்படும் அபாயம் உள்ளது
என, வாகன ஓட்டிகள் புலம்பி வருகின்றனர். எனவே, பொன்னேரிக்கரை-காஞ்சிபுரம் சாலை அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்."