உர மூட்டைகளை பறிமுதல் செய்த பறக்கும் படையினர்

சேலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 240 உர மூட்டைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2024-03-22 07:41 GMT

பறக்கும் படை அதிகாரிகள் 

 தேர்தல் விதிமுறைகள் அமலில் உள்ளதால் தஞ்சாவூர் மாவட்டத்தில் 25 இடங்களில் வாகன சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு வாகனங்கள் தீவிர சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி பகுதியில் பறக்கு படை அதிகாரிகள் இன்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சரக்கு வாகனத்தில் உரிய ஆவணம் இன்றி சேலத்தில் இருந்து கும்பகோணத்திற்கு 240 உர மூட்டைகள் எடுத்துச் செல்லப்பட்டது. அதன் மதிப்பு 6 லட்சத்து 75 ஆயிரம் ஆகும். இந்த நிலையில் உர மூட்டைகளுக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், பறக்கும் படை அதிகாரி அஜய் ராஜ் தலைமையிலான அதிகாரிகள் சரக்கு லாரியுடன் உர முட்டைகளை பறிமுதல் செய்து தஞ்சாவூர் தாசில்தார் அருள் ராஜிடம் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News