குமரி எம்பி , மேயர் கார்களில் பறக்கும் படையினர் சோதனை

குமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி பகுதியில் மாநகராட்சி மேயர் மற்றும் எம்பி கார்களில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுப்பட்டனர்.

Update: 2024-04-06 06:52 GMT

பறக்கும் படையினர் சோதனை

குமரி மாவட்டம், நாகா்கோவில் வடசேரி பகுதியில் மாநகராட்சி மேயரும், குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான ரெ.மகேஷ் காரில் பறக்கும் படையினா் நேற்று சோதனை செய்தனா். தக்கலையிலிருந்து நாகா்கோவில் நோக்கி வந்த விஜய்வசந்த் எம்.பி.யின் காரையும் பறக்கும் படையினா் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனா். இரு காா்களிலும் பணம், பொருள் எதுவும் சிக்கவில்லை.

குமரியில் கடந்த 24 மணி நேரத்தில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக கன்னியாகுமரி சட்டப்பேரவை தொகுதியில் ரூ.15 லட்சத்து39 ஆயிரத்து 700, நாகா்கோவில் தொகுதியில் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 820, பத்மநாபபுரம் தொகுதியில் ரூ.1 லட்சத்து 800, விளவங்கோடு தொகுதியில் ரூ.86 ஆயிரம், கிள்ளியூா் தொகுதியில் ரூ. 1லட்சத்து 18 ஆயிரம் என ரூ. 20 லட்சத்து 94 ஆயிரத்து 320 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News