தமிழக வெற்றி கழகம் சார்பில் அன்னதானம்
விருதுநகரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;
Update: 2024-05-29 05:03 GMT
அன்னதானம்
உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் சார்பில் கழகத் தலைவர் விஜயின் ஆணையின்படி தமிழ்நாடு முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர் அதனை முன்னிட்டு நேற்று விருதுநகர் தேசபந்து மைதானத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உத்தரவின்படியும், பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதல் படியும் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவர் செல்வம் தலைமையில் விருதுநகர் தேசபந்து மைதானத்தில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது இந்த நிகழ்வின் போது மாவட்ட வழக்கறிஞர் அணி, மாவட்ட தொண்டரணி, மாவட்ட மகளிரணி மற்றும் நகர ஒன்றிய பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.