மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
பழனி மற்றும் சாணார்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அடங்கிய குழு ஆயக்குடி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்களை ஆய்வு செய்தனர்.
Update: 2024-05-29 14:56 GMT
ஆயக்குடி பகுதியில் மாம்பழ குடோன்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு பழனி வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் சரவணகுமார் மற்றும் சாணார்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் வசந்தன் அடங்கிய குழு செவ்வாய்க்கிழமை மதியம் 3 மணி அளவில் ஆயக்குடி பகுதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாம்பழங்கள் செயற்கை முறையில் பழுக்க வைக்கப்படுகிறதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் கடை உரிமையாளா்களுக்கு பழச்சாறு தயாரிக்க அழுகிய பழங்களைக் பயன்படுத்தக் கூடாது, செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைக்கக் கூடாது, நெகிழி பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என அறிவுறுத்தினா்.