போலி பத்திரம் மூலம் வீடு அபகரிப்பு
வீட்டை போலி பத்திரம் மூலம் அபகரித்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள செட்டியபட்டி மணிவேல் அவரது மனைவி ஜோதிமணி. மணி வேலு கடந்த சில வருடங்களுக்கு முன்பு விபத்தில் காயம் அடைந்துள்ளார். இந்நிலையில், மருத்துவச் செலவுக்காக இதே பகுதியைச் சேர்ந்த கோகுல் குமார் மற்றும் அவரது மனைவி ராமேஸ்வரனிடம் சுமார் 2 லட்ச ரூபாய் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக திடீரென வீடு எங்களது பெயரில் உள்ளது,என்று கூறி மிரட்டி வருவதாகவும், மேலும் கடனாக வாங்கிய இரண்டு லட்சத்திற்கு தற்போது வரை வட்டி கட்டி வரும் நிலையில், போலி பத்திரம் மூலம் வீட்டை அபகரித்துக் கொண்டதாகவும், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
ஆனால், புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காததால், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மணி வேலு, ஜோதிமணி, மணிவேலுவின் தாயார் சின்னம்மாள் மற்றும் குழந்தைகளுடன் தங்களது மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர்.தீக்குளிக்க முயன்றவர்களை பாதுகாப்புக்கு இருந்த காவல்துறையினர் காப்பாற்றி அதிகாரியிடம் அழைத்துச் சென்றனர்.