சேலத்தில் தடயவியல், நச்சுயியல் செயல்முறை பயிற்சி
விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறை சார்பில் தடயவியல், நச்சுயியல் செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.
சேலம் விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் தடய அறிவியல் பிரிவானது குற்றவியல் விசாரணை மற்றும் சம்பவம், பாதுகாப்பு ஆகியவற்றில் தடயவியல், நச்சுயியலின் பங்கு குறித்த செயல்முறை சார்ந்த பயிற்சி பல்கலைக்கழகத்தின் வேந்தர் கணேசன் வழிகாட்டுதலின்படி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட பீனிக்ஸ் ஸ்கிரீனிங் சேவை மையத்துடன் இணைந்து 2 நாட்கள் கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து பேசினார். சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு தடயவியல் துறையின் ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் பாரி, பெங்களூரு பீனிக்ஸ் ஸ்கிரீனிங் சேவை மையத்தின் மூத்த ஆலோசகர் அனுப் குட்டர்கர் ஆகியோர் கலந்து கொண்டு குற்ற நிகழ்வில் தடயவியல் பங்களிப்பு மற்றும் பல்வேறு மேலாண்மை நிலைகள் குறித்து செயல்முறை பயிற்சியை மாணவர்களுக்கு விளக்கினர்.
இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதற்கான ஏற்பாடுகளை துறையின் தடய அறிவியல் பிரிவின் பொறுப்பாளர் மோகன், உதவி பேராசிரியர்கள் வின்சி, சாண்ட்ரா, ராஜாஸ்ரீ ஆகியோர் செய்திருந்தனர்.