முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் - பொதுமக்களூக்கு அன்னதானம்

Update: 2023-12-06 10:55 GMT

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம்

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் ஜெயலலிதா பேரவை சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட செயலாளர் சத்தியவாடி கே.பாஸ்கர் மலர் தூவி மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினார். புதிய பஸ் நிலையம் இணைப்புச் சாலையில் வடக்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை சார்பில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.நிகழ்ச்சியில் நகர செயலாளர் ஹோட்டல் எம் பாஷா, ஒன்றிய செயலாளர்கள் ஏ லோகேஸ்வரன், முனுசாமி, பேரவை மாவட்ட துணை தலை வர்கள் எஸ் தர்மதுரை, ஜேசிபி ராஜ், பொதுக் குழு உறுப்பினர் லதா குமார், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் ஏ. குத்புதீன், எம்ஜிஆர் மன்ற நகர செயலாளர் அனிபா, கூட்டுறவு சங்க முன்னாள் தலை வர்கள் சி கிறிஸ்டி, கே விஜயன், நகராட்சி கவுன்சிலர்கள் அம்பிகா மேகநாதன், தீபா செந்தில்குமார், ஒன் றிய அவைத்தலைவர் பந்தல் சேகர், மகளிர் அணி செயலாளர் பி. ராணி, மணிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

அதேபோல் பேரவை நகர செயலாளர் வி. மேகநாதன் தலைமை யில் பெரிய காலனி முகப்பில் அமைக்கப் பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தின நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர்கள் பாலசுப்பிரமணியம் பாலு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். எம்ஜிஆர் மன்றம் சார்பில் குளத்து மேட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படத்திற்கு சத்தியவாடி கே.பாஸ்கர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தெள்ளார் மேற்கு ஒன்றியம் அரியம் பூண்டி கிராமத்தில் நடந்த நிகழ்சியில் திருஉருவப்பட்த்திற்கு அண்ணா தொழிற் சங்க மாவட்ட பொருளாளர் டி.ஏ.ஆதி - கேசவன், ஊராட்சி - மன்ற தலைவர் தன லட்சுமி ஆதிகேசவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். இசா கொளத்தூர் கிராமத்தில் நடந்த நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா படத்திற்கு பேரவை மாவட்ட துணை செயலாளரும் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருமான எஸ்பி. சந்திரசேகர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Tags:    

Similar News