முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2024-06-03 15:47 GMT

குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 101வது பிறந்த நாளையொட்டி, குமாரபாளையத்தில் வடக்கு மற்றும் தெற்கு நகர தி.மு.க சார்பில், கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி வடக்கு, தெற்கு நகர பொறுப்பாளர்கள் விஜய்கண்ணன், ஞானசேகரன் தலைமையில் நடந்தது. சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் மேற்கு மாவட்ட செயலர் மதுரா செந்தில் பங்கேற்று, கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

Advertisement

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் மலரஞ்சலி செலுத்தினர். கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரா செந்தில் பங்கேற்று, 101 ஏழைப் பெண்களுக்கு இலவச சேலைகள் வழங்கியதுடன், ஆனங்கூர் பிரிவு சாலையில் அமைக்கப்பட்ட மேடை முன்பு ஆயிரத்து 100 நபர்களுக்கும், பாசம் ஆதரவற்றோர் மையத்தில் உள்ள முதியவர்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News