முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததினம்; இலவச கண் மருத்துவ முகாம்

சிவகங்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததினத்தை முன்னிட்டு இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2024-06-03 10:45 GMT

சிவகங்கையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்ததினத்தை முன்னிட்டு இலவச கண் மருத்துவ முகாம் நடந்தது. 

சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் அருகே தனியார் திருமண மண்டபத்தில் திமுக அயலக அணி சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்தநாள் மற்றும் நூற்றாண்டில் நிறைவு பெருவிழாவை முன்னிட்டு மாபெரும் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.

திமுக அயலக அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன் தலைமையிலும், சிவகங்கை நகர் மன்ற தலைவரும், திமுக நகர செயலாளருமான துரை.ஆனந்த் முன்னிலையில் நடைபெற்ற இம்முகாமினை, கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் துவக்கி வைத்தார். இதில் சிவகங்கை நகர், காஞ்சரங்கால், டி.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான முதியோர்கள் தங்களது கண்களை ஆர்வத்துடன் வந்து பரிசோதனை செய்து கொண்டனர்.

மேலும் அவர்களுக்கு தேவையான மருந்து மாத்திரைகளும், தேவையானவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை செய்வதற்கு ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன. முன்னதாக முன்னாள் முதல்வர் கலைஞரின் திரு உருவப்படத்திற்கு அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இம்மருத்துவ முகாமில் மாவட்ட திமுக நகர்மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன், சிவகங்கை வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் உட்பட பலர்  கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News