முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு நீதிமன்றத்தில் ஆஜர்
தமிழக அரசையும், முதல்வரையும் அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் ஆனார்.;
Update: 2024-01-12 01:20 GMT
ஆஜராக வந்த செல்லூர் ராஜு
கடந்த ஆண்டு மே மாதம் ஆர்ப்பாட்டம் ஒன்றில் தமிழக முதல்வரையும், தமிழக அரசையும் அவதூறாக பேசியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லுார் கே.ராஜூ மீது அவதுாறு சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்தார். இந்நிலையில் முன்னாள் செல்லுார் ராஜூ இன்று ஆஜராக நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டதின் பேரில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நீதிபதி சிவகடாட்சம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கின் விசாரணையை வரும் பிப்ரவரி 21 தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.