அரசு மருத்துவமனைக்கு போர்வைகள் முன்னாள் அமைச்சர் தங்கமணி வழங்கினார்
Update: 2023-09-29 04:01 GMT
அமைச்சர் தங்கமணி
குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு, முன்னாள் அமைச்சர் 100 போர்வைகள் வழங்கினார். இது குறித்து குமாரபாளையம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் பாரதி கூறியதாவது: மருத்துவமனையில் உள்ள உள் நோயாளிகளுக்கு தினம் ஒரு போர்வை வழங்க வேண்டும் என எங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. போதிய போர்வைகள் இல்லாததால் உதவி கேட்டோம். முன்னாள் அமைச்சர் தங்கமணி பங்கேற்று, 80 ஆயிரம் மதிப்பிலான நூறு புதிய போர்வைகள் வழங்கினார். இவ்வாறு அவர் கூறினார். ஜி.ஹெச். செவிலியர் மேற்பார்வையாளர் சாந்தி, நகர அ.தி.மு.க. செயலர் பாலசுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.