நஞ்சுண்டேஸ்வரர் ஆலயத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி சாமி தரிசனம்

சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அலங்காரம் செய்யப்பட்டது.;

Update: 2024-04-24 13:21 GMT

முன்னாள் அமைச்சர் தங்கமணி சாமி தரிசனம் 

நாமக்கல் அடுத்து உள்ள அலங்காநத்தம் பிரிவு ரோடு சேந்தமங்கலம் பிரதான சாலையில் அமைந்துள்ள "பழையபாளையம் கிராமம்" சின்ன ஏரி மற்றும் பெரிய ஏரி நீர் பெருகி வழிந்து ஓடும் இயற்கை எழில் மிகுந்த இடத்தில் பார்வதி அம்பிகை உடனுறை நஞ்சுண்டேஸ்வரர் நூதன ஆலய அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் கடந்த மார்ச் 27இல் நடைபெற்றது.

இந்த ஆலயத்தில்,சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் ரிஷப வாகனத்தில் சிவபெருமான் அமர்ந்து அருள்பாலிக்கும் வகையில் அலங்காரம் செய்து இருந்தனர். இதில் முன்னாள் அமைச்சர் பி.தங்கமணி MLA கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார்.முன்னதாக ஸ்ரீதேவி. P.S.மோகன் (Agri) மற்றும் ஊர் மக்கள் சார்பில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

Advertisement

இந்த நிகழ்வில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் சேகர் MLA, கழக அமைப்பு செயலாளர் சேவல் ராஜு, வழக்கறிஞர் அய்யாவு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் முரளி பாலுச்சாமி, மாவட்ட மாணவரணி செயலாளர் பொன்னுசாமி மற்றும் அதிமுக நகர ஒன்றிய ,பேரூர் கழக நிர்வாகிகள் சிறப்பு மண்டல பூஜையில் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அனைவருக்கும் பழையபாளைம் ஸ்ரீதேவி மோகன் குடும்பத்தினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News