வழக்கறிஞர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு -முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்து
புதிதாக தேர்வாகியுள்ள வழக்கறிஞர் சங்க நிர்வாகிகளுக்கு முன்னாள் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Update: 2023-10-19 15:38 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுக்கா சார்பு நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் மற்றும் ராசிபுரம் குற்றவியல் வழக்கறிஞர்கள் சங்கத்திற்கு புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, ராசிபுரத்தில் உள்ள சுஜிதா தனியார் ஓட்டலில் உள்ள ஹாலில் நடைபெற்றது. இந்த பதவியேற்பு விழாவிற்கு பல்வேறு பகுதியிலிருந்து வழக்கறிஞர்கள் மற்றும் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களுக்குச் சால்வை அணிவித்து மலர் கொத்து வழங்கி அனைவரும் சிறப்பித்தனர்.