திருப்பனந்தாளில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முன்னாள் எம்பி பிரச்சாரம்

திருப்பனந்தாள் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் பாபுவை ஆதரித்து, முன்னாள் எம்பி பாரதிமோகன் பிரச்சாரம் செய்தார்.

Update: 2024-04-11 04:15 GMT

 தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருப்பனந்தாள் ஒன்றித்துக்கு உட்பட்ட திருலோகியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பாபுவை ஆதரித்து ஏராளமானோர் இரு சக்கர வாகனத்தின் முன்னே செல்ல முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தஞ்சை கிழக்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.கே. பாரதிமோகன் திறந்த ஜீப்பில் வீதி வீதியாக சென்று தீவிர வாக்கு சேகரித்தார்.

தொடர்ந்து திருப்பனந்தாள் தெற்கு மற்றும் வடக்கு ஒன்றிய பகுதிகளான கீழ சூரியமூலை, முள்ளுக்குடி, வேலூர், கதிராமங்கலம், மகாராஜபுரம் உள்ளிட்ட உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்கு சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் அதிமுக கழக நிர்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News