முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் விழா

நாமக்கல்லில் முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள் விழா

Update: 2023-12-04 12:21 GMT

நாமக்கல்லில் முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த நாள் விழா

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் கவிஞர் நினைவு இல்ல நூலகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் பிறந்தநாள் விழா நடைபெற்றது. நூலக வாசகர் வட்ட தலைவர் டாக்டர் மோகன் விழாவுக்கு தலைமை வகித்தார். நூலகர் செல்வம் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மகாத்மா காந்தி சிலை அமைப்பு குழு பொருளாளர் நல்லிபாளையம் சீனிவாசன் கலந்துகொண்டு, முன்னாள் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து இந்து சமய ஆன்மீக பேரவை தலைவர் ஏகாம்பரம், டாக்டர் ராஜேந்திரபிரசாத்தின் சிறப்புகளை எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் ஜவகர், ராதாகிருஷ்ணன், முகமது ரபி, ரவி, வினோத், மாதவகுமார், சுரேஷ், ராஜ்குமார் இன்ஜினியர் மணி, பெரியண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வாசகர் வட்ட பொருளாளர் அன்புச்செல்வன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News