மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டம்

மயிலாடுதுறையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாள் விழா பாஜக சார்பில் பாஜக மாவட்ட தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Update: 2023-12-25 15:58 GMT

வாஜ்பாய் பிறந்த நாள் கொண்டாட்டம்

மறைந்த முன்னாள் பாரத பிரதமர் அடல்பிகாரி வாய்பாய் பிறந்த நாள் விழா மயிலாடுதுறையில் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொண்டாடப்பட்டது. நகரத்தலைவர் வினோத் தலைமையில் நடைபெற்ற விழாவில், மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்ட வாஜ்பாயி உருவப்படத்துக்கு பாஜக மாவட்ட தலைவர் அகோரம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

மாநில செயற்குழு உறுப்பினர் சேதுராமன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, மலர்தூவி மரியாதை செலுத்தினர். நிறைவாக, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க பாடுபடுவது என உறுதிமொழி ஏற்றுக்கொண்டு, வேண்டும் மோடி, மீண்டும் மோடி என முழக்கங்களை எழுப்பினர்.

Tags:    

Similar News