தேர்தல் பணிக்கு தகுதியான முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களவை பொதுத்தேர்தல் 2024 தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, தகுதியான முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்,

Update: 2024-03-19 01:14 GMT
தேர்தல் பணிக்கு தகுதியான முன்னாள் படை வீரர்கள் விண்ணப்பிக்கலாம்
வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்கு, விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இப்பணிக்காக மதிப்பூதியம் மற்றும் தினசரி உணவுப்படி அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சமாக 65 வயது இருக்கலாம் எனவும் எனவே விருப்பமுள்ள விருதுநகர் மாவட்டத்தைச் சார்ந்த திடகாத்திரமுள்ள முன்னாள் படைவீரர்கள் தங்களது அசல் படை விலகல் சான்று மற்றும் அடையாள அட்டையுடன் திருவில்லிபுத்தூரிலுள்ள விருதுநகர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் உடனடியாக நேரில் வருகை தந்து தங்களது பெயரை பதிவு செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags:    

Similar News