இருபள்ளி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே ரூ.61.15 லட்சம் மதிப்பீட்டில், இரு பள்ளிகளுக்கு புதிய கட்டடம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

Update: 2024-02-19 02:02 GMT
பள்ளிக் கட்டடங்கள் அடிக்கல் நாட்டு விழா 

தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம், புதுப்பட்டினம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு, ரூ.28.35 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டவும், இதேபோல் செருபாலக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூபாய் 32.80 லட்சம் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டவும், அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.

பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து அடிக்கல் நாட்டி, பணிகளைத் துவக்கி வைத்தார். சேதுபாவாசத்திரம் ஒன்றியப் பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் முன்னிலை வகித்தார்.

நிகழ்வில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சடையப்பன், நாகேந்திரன், ஒன்றியப் பொறியாளர் மணிமேகலை, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் நாடியம் சி.மதிவாணன், ராஜலெட்சுமி முனியாண்டி, ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஷே.அமீர் முகைதீன் (புதுப்பட்டினம்), ருக்மணி மணியன் (செருபாலக்காடு), தலைமை ஆசிரியர்கள் சிங்காரவேலு, பார்வதி, கிராமப் பிரமுகர்கள் முத்துராமலிங்கம், ராஜகோபால், அ.கருப்பையன், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் காளீஸ்வரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News