முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் காங்கிரஸ் இணைவு
முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் தாம்பரம் நாராயணன் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.;
By : King 24X7 News (B)
Update: 2024-05-19 15:42 GMT
சத்ய பவன்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை முன்னிலையில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் முற்போக்கு சிந்தனையாளர் பேரவையின் நிறுவனத் தலைவர் தாம்பரம் நாராயணன் அவர்கள் காங்கிரஸ் பேரியக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டார் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச்செயலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாம்பரம் நாராயணன் தலைமையில் பல்வேறு இயக்கங்களை சார்ந்த கீழ்கண்டவர்கள் காங்கிரஸ் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டார்கள்.
இவ்விழாவில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர்கள் சொர்ணா சேதுராமன், என். முருகானந்தம் பொதுச்செயலாளர்கள் செல்வம், கே. தணிகாசலம், என். அருள் பெத்தையா,எஸ்.ஏ. வாசு, அமைப்பு செயலாளர் செ. ராம் மோகன், ஊடகத்துறை தலைவர் ஆனந்த் சீனிவாசன் உள்ளிட்ட பலர் உடன் பங்கேற்றார்கள்.