கம்பைநல்லூர் சூதாடிய நான்கு பேர் கைது
கம்பைநல்லூர் அருகே ஆல்ரப்பட்டி முனியப்பன் கோவில் சூதாடிய நான்கு பேர் கைது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை;
Update: 2024-03-19 17:50 GMT
காவல்துறை விசாரணை
தர்மபுரி மாவட்டம் அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கம்பைநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் யோக பிரகாஷ் தலைமையில் காவலர்கள் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆல்ரப்பட்டி முனியப்பன் கோவில் அருகே அதே பகுதியை சேர்ந்த கோவிந்தன் மகன் சின்னராஜ் மகன் சூர்யா, பழனிசாமி மகன் வெங்கடேசன் , மல்லசமுத்திரத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் பிரதாப் ஆகிய 4 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.