அரசு அனுமதியின்றி மது விற்ற நான்கு பேர் கைது !

குமாரபாளையத்தில் அரசு அனுமதியின்றி மது விற்ற நான்கு பேர் கைது செய்யப்பட்டு, 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2024-05-03 06:03 GMT

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் அரசு அனுமதியில்லாமல் மது விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் ஜே.கே.கே. பங்களா பின்புறம், வட்டமலை உணவு விடுதி அருகில், பள்ளிபாளையம் சாலை உணவு விடுதி அருகில் ஆகிய இடங்களில் மது விற்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் பாலன், 68, பூமிநாதன், 47, இளங்கோ, 45, மாதேஸ்வரன், 64, ஆகிய நான்கு பேர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து 145 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து, குமாரபாளையம் போலீசார் விசாரணை  செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News