பரமத்தி வேலூர்: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

பரமத்தி வேலுார் அருகே உள்ள பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வேலூர் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-06 20:02 GMT

கோப்பு படம்

பரமத்தி வேலுார் அருகே உள்ள பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை வேலூர் பகுதியில் உள்ள 4 டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி வேலுார் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா கூறியுள்ளதாவது: பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூர் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.  இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் திருத்தேர் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி இன்று நடைபெறுகிறது.

விழாவை   முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் பகுதியில் உள்ள 3 டாஸ்மாக் கடைகள் மற்றும் பாண்டமங்கலம் அருகே உள்ள உரம்பூர் டாஸ்மாக் உள்ளிட்ட நான்கு டாஸ்மாக் கடைக்கு விடுமுறை அளிக்க நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் ராஜேஸ்கண்ணன் அறிவுறுத்தலின்படி, டாஸ்மாக் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் இலாஹிஜான் உத்திரவின்படி விடுமுறை அளிக்கப்படுவதாக பரமத்தி வேலூர்  துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கீதா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News