நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டி
இலக்கியம்பட்டியில் நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.;
Update: 2024-05-27 10:00 GMT
இலக்கியம்பட்டியில் நான்காம் ஆண்டு கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.
தர்மபுரி மாவட்டம்,மற்றும் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலக்கியம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் அண்ணாநகர் பிளாக் ரைடர்ஸ் கிரிக்கெட் கிளப் நடத்தும் நான்காம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் திருவிழா நடைபெற்றது.
இதில் முதல் பரிசாக ரூ.20,001, இரண்டாவது ரூ.18,001, மூன்றாவது பரிசாக ரூ.12,001 வழங்கப்பட்டது. இதில் இது மட்டுமல்லாமல் சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது இப்போட்டிக்கு பல்வேறு பகுதியி ல் இருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். இலக்கியம் பட்டி, அண்ணாநகர், அழகாபுரி, பாரதிபுரம், ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் இந்த போட்டியை வந்து கண்டு களித்தனர்.