நாகையில் கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் - ஆட்சியர் தகவல்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை நிலையங்களிலும் இன்று முதல் வரும் 14ம் தேதி வரை கோழிக்கழிச்சல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ் தெரிவித்தார்.

Update: 2024-02-01 07:00 GMT

 ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் 

நாகப்பட்டினம் மாவட்டத்தில் கோழிக்கழிச்சல் நோயை தடுப்பதற்காக கோழிவளர்ப்போர் மற்றும் பண்ணை வைத்திருப்போர் தங்கள் கோழிகளுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்கீஸ், தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் நடத்தப்படும் கோழிக்கழிச்சல் நோய் தடுப்பூசி முகாம் நடப்பாண்டில் 01.02.2024 முதல் 14.02.2024 வரை நடத்தப்படவுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் இந்த முகாம் நடத்தப்பட உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு கோழிக்கழிச்சல் தடுப்பூசி மருந்து 1.00 இலட்சம் எண்ணிக்கையில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வரும் 01.02.2024 முதல் 14.02.2024 வரை தங்கள் கோழிகளுக்கு முகாமில் தடுப்பூசி போட்டு பயன்பெற வேண்டும் என நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News