போன்பே போலி எஸ்எம்எஸ் மூலம் நகை கடையில் மோசடி

நாட்றம்பள்ளி அருகே நகைக்கடையில் 1.5 சவரன் நகையை வாங்கி கொண்டு போன்பே போலி எஸ்எம்எஸ்ஸை காட்டி நகைக்கடைக்காரரை ஏமாற்றி சென்ற மர்ம நபரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.;

Update: 2024-03-17 07:45 GMT

காவல் நிலையம் 

 திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த ஆர்.சி.எஸ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பரமசிவம் இவர் அதே பகுதியில் லட்சுமி நகைக்கடை என்ற பெயரில் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார் இந்த நிலையில் கடந்த ஆறாம் தேதி நகை கடைக்கு வந்த மர்ம நபர் ஒருவர் ஒன்றரை சவரன் அளவில் நகையை எடுத்துள்ளார் அதன்பின்பு அதற்கான தொகை 79ஆயிரத்து 235 ரூபாயை போன் பேவில் அனுப்புவதாக கூறி தனது மொபைலில் ஏற்கனவே டைப் பண்ணி வைத்திருந்த மெசேஜில் தொகையை மாற்றி கடையின் உரிமையாளருக்கு குறுந்தகவல் மட்டும் அனுப்பி உள்ளார்.

Advertisement

பணம் வந்துவிட்டதாக நினைத்த கடையின் உரிமையாளர் நகையை கொடுத்து அனுப்பியுள்ளார் அதன் பின்பு இரண்டு மணி நேரம் கழித்து வங்கி கணக்கை பரிசோதனை செய்த பின்பு தான் ஏமாற்றப்பட்டது அறிந்துள்ளார். இந்த சம்பவம் அனைத்தும் பரமசிவன் கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கட்சியில் பதிவாகியுள்ளது இதனை ஆதாரமாகக் கொண்டு நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் தன்னை ஏமாற்றிய மர்ம நபர் மீது நடவடிக்கை எடுக்கவும் பணத்தை மீட்டு தரக் கோரியும் புகார் அளித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News